சஜித் அணிக்குள் மோதலா, முக்கிய தலைவர்கள் வெளியேறுவார்களா?

banner

ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித முரண்பாடும் கிடையாது எனவும், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதியதொரு அரசை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.





ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.





இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.





இதில் சஜித் தலைமையில் தொடர்ந்தும் இயங்குவதென்றும், புதியதொரு அரசை உருவாக்குவதே இலக்கு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த யோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.





ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வெளியேறவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.