எதிரணியின் திட்டங்கள் புஷ்வாணம் - அரசை கவிழ்க்கவே முடியாது

Politics 2 ஆண்டுகள் முன்

banner


" இந்த அரசுமீது நம்பிக்கையிருப்பதாலேயே மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை நாட்டு மக்கள் வழங்கினர். எனவே, எதிரணியினர் எத்தகைய திட்டங்களை வகுத்தாலும் அரசை கவிழ்க்க முடியாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
 
எதிரணி உறுப்பினர்களால் அரசு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
 
" கொரோனா நெருக்கடி நிலை தொடர்பில் சிற்சில விமர்சனங்கள் உள்ளன. ஆளுந்தரப்பிலுள்ள ஒருசிலர்மீது தனிப்பட்ட ரீதியில் மக்களுக்கு அதிருப்தி உள்ளது. எனினும், இந்த அரசுமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை.
பெரும் நம்பிக்கையிருப்பதாலேயே மக்கள் ஒன்றுபட்டு எமது அரசுக்கு பெரும் பலத்தை அன்று வழங்கினர். மக்கள் வழங்கிய ஆணையை நாம் பாதுகாப்போம். எனவே, எப்படிதான் துள்ளினாலும் எதிரணியால் அரசை ஒருபோதும் வீழ்த்த முடியாது." - என்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.
 
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்த விதம் தொடர்பில் மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
 
“ தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது தவறு என்பதுபோலவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட விதமும் தவறு. அத்தகைய அணுகுமுறையை அனுமதிக்க முடியாது.இது சரி செய்யப்படவேண்டும்.” - என்றார்.