அரசுக்கு எதிராக உருவாகும் மாபெரும் மக்கள் இயக்கம்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

“எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் இயக்கம் கட்டியெழுப்படும். கடந்தகால தவறுகளையும் சரிசெய்துகொண்டு முன்நோக்கி பயணிப்போம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.





எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஆரம்பக்கட்ட கூட்டம் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





” எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இதன் ஆரம்பக்கூட்டமே இன்று (நேற்று) நடைபெற்றது. இது தொடர்பில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தாலும் முதல் சந்திப்பு தற்போதுதான் நடைபெறுகின்றது. கட்சி தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். திருப்தியளிக்கும் வகையில் சந்திப்பு அமைந்தது.





கூட்டு பயணம் குறித்து கடந்த காலங்களில் நம்பகத்தன்மையற்ற நிலைமை ஏற்பட்டது. ஏனெனில் 2015 இல் நாம் கொண்டுவந்த ஜனாதிபதியே கொள்கைத் திட்டங்களை விமர்சித்தார். நாட்டை கட்டியெழுப்புவதை விடுத்து கட்சியைக் கட்டியெழுப்பினார்.





அரசுக்குள் குழப்பநிலை ஏற்பட்டது. ஐ.தே.க. தலைமையும் இரட்டை நிலைப்பாட்டில் செயற்பட்டது. எனவே, கடந்த முறை இழைத்த தவறுகளை திருத்திக்கொண்டு, அனைவரையும் அரவணைத்தபடி தெளிவான வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி பயணிப்போம். பரந்தப்பட்ட மக்கள் இயக்கமொன்றை கட்டியெழுப்புவதே எமது நோக்கம்.





இந்த அரசுமீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். முன்னோக்கி பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் எம்முடன் பேச்சு நடத்துகின்றனர். அரச கூட்டணிக்குள் குழப்பம் மாபெரும் மக்கள் இயக்கத்தை
கட்டியெழுப்புவதே நோக்கம்





உள்ளது. அது விரைவில் வெடிக்கும். ” – என்றார்