கம்மன்பில பதவி விலகலாம் - மொட்டு கட்சியின் அறிவிப்பால் பரபரப்பு

banner

" வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு கோரியிருந்தோம். ஆனால் அவரை பதவி விலக்குவதற்கு எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கமுடியாது. பதவி விலகுவதும், விலக்குவதும் இறுவேறு விடயங்களாகும் " - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
 
மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
 
இதன்போது " எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு பொறுப்பையேற்று வலுசக்தி அமைச்சர் கம்மன்பில பதவி விலகவேண்டும் என நீங்கள் அறிக்கை விட்டிருந்தீர்கள். தற்போது அவரை பதவி விலக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவீர்களா” என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவ்வாறு கூறினார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
 
" அப்போதைய சூழ்நிலையில் எமது கட்சி அங்கத்தவர்களின் நிலைப்பாட்டையே நான் தெளிவுபடுத்தி அறிக்கை விடுத்தேன். பதவி விலகுமாறு கோரினோம். ஆனால் எதிரணியின் தேவைக்கேற்ப பதவி விலக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாது. இதுதான் கட்சி நிலைப்பாடு. அமைச்சர் கம்மன்பில பதவி விலகுவது வேறுகதை. விலக்குவது வேறு. அந்தவகையில் இப்பிரேரணையை எமது கட்சி ஆதரிக்காது.
 
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து நாம் நாடகமாடவில்லை. கட்சி அங்கத்தவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்துதான் எதிர்ப்பை வெளியிட்டோம். அந்தவகையில் எரிபொருட்களின் விலையை குறைக்ககூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை நிதி அமைச்சர் நிச்சயம் செய்வார்.
 
அரசின் பலத்தை குறைப்பதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்ககூடாது என நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” - என்றார்.