கல்வி அமைச்சராகிறார் தினேஷ்

banner

ஶ்ரீலங்கா  பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளது . இதன்போது சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளன.





அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வகிக்கும் அமைச்சுகளின்கீழுள்ள விடயதானங்களும் மாற்றியமைக்கப்படவுள்ளன.





பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் பொருளாதார இலக்குகளை விரைவில் அடைவதை இலக்காகக்கொண்டே அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.





அமைச்சரவை மறுசீரமைப்பின்போது சுதந்திரக்கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் அக்கட்சிக்கு மேலும் மூன்று அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.





கல்வி அமைச்சு தினேஷ் குணவர்தனவிடமும், வெளிவிவகார அமைச்சு ஜீ.எஸ். பீரிஸிடமும் கையளிக்கப்படலாம் எனவும், சிலவேளை உதய கம்மன்பிலவிடம் கல்வி அமைச்சு பதவி கையளிக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.