இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

banner

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற, கொவிட் ஒழிப்பு செயலணிக்கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஊரங்கு உத்தரவு இவ்வாறு நீடிக்கப்பட்டாலும் - அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழில் துறைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தடுப்பூசி வேலைத்திட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.