பார் மாபியாக்களை அம்பலப்படுத்தும் அநுர

Politics 2 ஆண்டுகள் முன்

banner

” மதுபானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களாக சில அமைச்சர்கள் இருக்கின்றனர். அதேபோல மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.இவர்களின் வருமானத்துக்காகவே ‘பார்கள்’ திறக்கப்பட்டிருக்கும்.” -என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.





ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க கூறியவை வருமாறு,





” இந்ந நாட்டில் ‘சட்டம்’ என்பது இல்லை. இருந்த ஒரே சட்டம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமாகும். தற்போது அந்த சட்டமும் இல்லாமல்போயுள்ளது. ஆரம்பத்தில் கடைகளில் ஒரு பலகையே திறந்திருந்தது. தற்போது ஆறு பலகைகள் திறந்துள்ளன. பொது முடக்கத்தைக்கூட ஆளுந்தரப்பு தனக்கு ஏற்றவகையில் பயன்படுத்திக்கொள்கின்றது.





மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியது யாரென தெரியவில்லையாகம். மதுபான உற்பத்தி சாலைகளின் உரிமையாளர்களாக சில அமைச்சர்கள் இருக்கின்றனர். மதுபானம் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இருக்கின்றனர். எனவே, பார்கள் மூடப்பட்டுள்ளதால் அவர்களின் வருமானம் இல்லாமல் போயுள்ளது. அதேபோல அரசுக்கு கிடைக்கும் வருமானமும் குறைவடைந்துள்ளது. எனவே, இவ்விரு தரப்புகளும் இணைந்தே பார்களை திறக்கும் முடிவுகளை எடுத்திருக்கும்.” -என்றார்.