ஐ.நா. பொறிமுறையை ஏற்கமாட்டோம் - இலங்கை திட்டவட்டம்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.





பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பொன்றின் போதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.





பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் கௌரவம், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயற்படும். பொதுநலவாய நாடுகளுடனான வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.





உணவுப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட விவசாய உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி அண்மையில் 'காலநிலை மற்றும் பசுமைப் பொருளாதாரம்' எனும் முன்முயற்சியை இலங்கை ஆரம்பித்துள்ளது.