மைத்திரியை கடுமையாக விளாசித் தள்ளும் சந்திரிக்கா!

banner

" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொள்கைகளை, தற்போதைய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விற்றுபிழைத்துக்கொண்டிருக்கின்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் குற்றஞ்சாட்டினார்.





இலங்கையின் 4ஆவது பிரதம அமைச்சரான எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தின நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பங்குபற்றலுடன் ஹொரகொல்லவிலுள்ள பண்டாரநாயக்கவின் நினைவிடத்தில் நேற்று சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் நடைபெற்றது.





அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சந்திரிக்கா அம்மையார் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.





" பண்டாரநாயக்கவுக்கான நினைவு தின நிகழ்வை கட்சி ஏற்பாடு செய்வதில்லை. அதனை பண்டாரநாயக்க குடும்பமே செய்துவருகின்றது. நிகழ்வை நடத்துவதைவிடுத்து பண்டாரநாயக்கவின் பெயரை விற்று பிழைத்துக்கொண்டிருக்கின்றது தற்போதைய சுதந்திரக்கட்சி.





மைத்திரிபால சிறிசேன 5 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தார். ஒரு வருடம் மட்டுமே இங்கு வந்தார். தற்போது ஏனைய இடங்களில் இருந்து அவர் விரட்டப்பட்டுள்ளதால் இன்று நிச்சயம் வருவார்." - என்றும் சந்திரிக்கா அம்மையார் கூறினார்.





அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் நேற்று நினைவிடத்துக்கு வந்து பண்டாரநாயக்கவுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.





தற்போதைய சுதந்திரக்கட்சி திசைமாறி பயணிப்பதாகவும், ராஜபக்ச கொள்கையிலேயே பயணிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.