ரணிலின் 'அரசியல் வியூகத்தால்' அச்சத்தில் சஜித் அணி

Politics 2 ஆண்டுகள் முன்

banner

அரசியல் வாதியாக மட்டுமல்ல, அனைத்துலக மட்டத்திலும் சிறப்பு இராஜதந்திரியாகக் கருதப்படுகின்ற ரணில் விக்கிரமசிங்க, கடந்த சில நாட்களாக தொடர் சந்திப்புகளை நடத்திவருகின்றார்.





கட்சி கூட்டம், இளைஞர் அமைப்புகளுடனான சந்திப்பு, தொழிற்சங்க பிரமுகர்களுடனான பேச்சு என ‘ஒன்லைனில்’ அவர் செம பிஸியாக இருக்கின்றார். அதுமட்டுமல்ல சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் நிகழ்நிலை கூட்டங்களிலும் பங்கேற்று, சிறப்புரைகளை ஆற்றிவருகின்றார்.





50 எம்.பிக்கள் கைவசம் இருந்த நிலையில்கூட ஆட்சிஅதிகாரத்தைக் கைப்பற்றிய ரணில், ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போதுகூட மதிநுட்பத்துடன் செயற்பட்டு வெற்றிபெற்றார்.





அரசியலில் எந்நேரத்தில் வேண்டுமானாலும் புரட்சி ஏற்படுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வியூகங்களை வகுக்கும், ரணிலின் அண்மையகால நகர்வுகள், அரசை மட்டுமல்ல ஐக்கிய மக்கள் சக்தியையும் கிலிகொள்ள வைத்துள்ளதாம்.





ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் இருவர், சஜித் பிரேமதாசவை வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இதன் பின்னணியில்கூட ரணிலின் குள்ளநரி ஆட்டம் இருக்கலாம் என அரசியல் களத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.