இந்திய - இலங்கை உறவு குறித்து பீரிஸ் பெருமிதம்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இரு தரப்பு உறவென்பது ஒரு விடயப்பரப்பை மட்டும் மையப்படுத்தியது அல்ல. அது அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பரிபூரமாண உறவாகும்."  - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.





ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" இந்தியாவின் குஷி நகரிலுள்ள விமான நிலையமானது, சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டு, ஒக்டோபர் 20 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. குறித்த விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்தே முதலாவது விமானம் செல்கின்றது. அந்த விமானத்தில் 100 பிக்குகள் செல்கின்றனர். அமைச்சர் நாமல் ராஜபக்சவும் பயணிக்கின்றார்.





முதலாவதாக அங்கு தரையிரங்கும் விமானத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பார். இது இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பாகும்.





இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இரு தரப்பு உறவென்பது இரு விடயத்தையோ அல்லது வேலைத்திட்டத்தையோ மையப்படுத்தியது அல்ல. அது சகல விடயங்களையும் உள்ளடக்கியது. இதற்கான அடித்தளமாக பௌத்த தர்மமே விளங்குகின்றது.