'பன்டோரா ஆவணம்' - சு.க. விடுத்துள்ள கோரிக்கை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

” பன்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.” – என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.





நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த கோரிக்கையை முன்வைத்தார்.





” பன்டோரா ஆவண விவகாரத்துக்கு முடிவு காணப்பட வேண்டும். அது தொடர்பில் ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன். அவ்வாறு குழு அமைத்தால் திருக்குமாரன் நடேசன், நிருபமா ராஜபக்ச உட்பட பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தலாம். ஊல், மோசடி இடம்பெறவில்லையெனில் அவர்களும் துணிந்து கருத்து வெளியிடலாம்.”- என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.





அதேவேளை, தயாசிறி ஜயசேகரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆதரவை வெளியிட்டது.