'பீதியைக் கிளப்பும் டெல்டா பிளஸ்'

banner

டெல்டா பிறழ்வை விட டெல்டா பிளஸ் (Delta Plus) பிறழ்வு 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது என வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





நாட்டில் இதுவரை எவருக்கும் டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.





எனினும்,இந்த புதிய துணை பிறழ்வு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





COVID-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு டெல்ட்டா அல்லது டெல்ட்டா பிளஸ் பிறழ்வு தொற்றாது என ஆய்வுகளினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.





புதிய பிறழ்வுகள் வௌிநாடுகளிலிருந்து காவப்பட்டு வருபவை மாத்திரமின்றி, நாட்டிலும் உருவாகக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ சுட்டிக்காட்டினார்.