கோட்டாவுடன் அரசியல் சமருக்கு தயாராகும் பங்காளிகள்!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. குறித்த நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்குவதற்கு நாம் எதிர்ப்பு. ஜனாதிபதி எம்மை சந்திக்காவிட்டால் பரவாயில்லை. மக்களுடன்தான் எமக்கு கொடுக்கல் - வாங்கல்."





இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார அறிவித்தார்.





யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.





இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் கொழும்பில் நேற்றுகூடி பங்காளிக்கட்சிகள் ஆராய்ந்தன. சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் வாசு மேற்கண்டவாறு கூறினார்.





" ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் ஏன் இன்னும் எதிர்ப்பு." - என எழுப்பட்ட கேள்விக்கு, " இல்லை. இன்னும் இறுதி முடிவு இல்லை. அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். நாம் எதிர்ப்பு." - என்று அமைச்சர் வாசு குறிப்பிட்டார்.





அத்துடன், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு,





" சந்திக்க விருப்பமில்லையெனில் பலவந்தமாக சந்திக்க முடியாது. நாம் மக்களுடன் கலந்துரையாடுவோம்." -என்றார்.