இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

இலங்கைக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





200க்கும் அதிகமான பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.





சர்வதேச சட்ட மீறல்களுக்காக இலங்கையர்கள் பலர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படுகின்ற முதலாவது வழக்கு இதுவாகும்.





ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாத நிலையில் இலங்கைக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற நிலைப்பாடு நீண்ட காலமாக இருந்தது.





2017இல் மியன்மாருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், அதனை அடிப்படையாக வைத்து இலங்கை மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.