அரசியல் போர் ஆரம்பம் - விமலுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" முதுகெலும்பிருந்தால் அமைச்சு பதவியை துறக்கவும்." - இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சவால் விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி.





" பங்காளிக்கட்சிகள் அரசுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசின் வேலைத்திட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். முதுகெலும்பிருந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு விமல் வீரவன்சவுக்கு சவால் விடுக்கின்றோம்.





உள்ளே இருந்து பொங்கியெழுவதைவிட வெளியே சென்று விமர்சிப்பதே மேல். " - என்றும் திஸ்ஸ குட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.





அதேவேளை, அமைச்சரவையில் பேச வேண்டிய விடயங்களை வெளியில் வந்து விமர்சிப்பது பொருத்தமற்ற நடவடிக்கை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.