கோட்டாவின் அமைச்சரவைக்கு கம்யூனிஸ்ட் கட்சி சாட்டையடி

Politics 2 ஆண்டுகள் முன்

banner

இலங்கை சுதந்திரமைடைந்த பின்னர் இந்த நாடு இதுவரை கண்டிராத மோசமான அமைச்சரவையே தற்போதைய அமைச்சரவையாகும் என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் டியூ குணசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





"அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் நடைமுறைக்கு மாறானவை மற்றும் குறுகிய நோக்குடையவை என்பது தெளிவாகின்றது.





'ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற திட்டத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் செயற்படுவதும் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட நகைப்புக்குரிய ஒரு நடவடிக்கையாகும்.





பணத்தை அச்சிட்டே அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2,000 பில்லியன் வரையில் பணம் அச்சீட்டு இருக்கிறாா்கள். தற்போதைய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றே நினைக்கின்றேன்."- என்றார்.