வெளிவிவகார அமைச்சுக்குள் மோதலா?

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" எனக்கும், எனது அமைச்சின் செயலாளருக்குமிடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஒன்றாக இணைந்தே குழுவாக சர்வதேச மட்டத்திலுள்ள சவால்களை எதிர்கொள்கின்றோம்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





“ நான் பல அமைச்சுகளை வகித்துள்ளேன். பலருடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். அந்தவகையில் வெளிவிவகார அமைச்சின் தற்போதைய செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மிகவும் அர்ப்பணிப்புடன் சிறப்பாக செயற்படக்கூடியவர். ஏதாவது வேலையை ஒப்படைத்தால் உரிய நேரத்துக்குள் அதனை செய்துமுடிக்கும் ஒழுக்க விழுமியமும் அவரிடம் உள்ளது.





எனக்கும், அவருக்குமிடையில் எவ்வித பிரச்சினையும், பிளவும் இல்லை. அவ்வாறு உள்ளது என பரபும் தகவல்கள் போலியானவை. அவற்றை நிராகரிக்கின்றேன். எமது நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் பல சவால்கள் உள்ளன. அவற்றை ஒன்றாக இணைந்து குழுவாகவே நாம் எதிர்கொண்டுவருகின்றோம். மாற்றமும் ஏற்பட்டுள்ளது. “ - என்றார்.