குறிஞ்சாக்கேணி பாலம் குறித்து வெளியான புதிய தகவல்

banner

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, 9 மாதங்களுக்குள் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.





இலங்கையின் வீதி கட்டமைப்பின் புதிய தகவல்கள் எனும் தலைப்பில் இன்று முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டது.





சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தினூடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய, அனைத்து வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.





நாட்டிலுள்ள அனைத்து கிளை வீதிகள் மற்றும் உள்நுழைவு வீதிகளையும் அபிவிருத்தி செய்து அவற்றை பிரதான வீதி கட்டமைப்புடன் தொடர்புபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் R.W.R.பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.





மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையான 41 கிலோமீட்டர் நீளமுடைய பகுதி வெகு விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.





அத்துடன், 2024 ஆம் ஆண்டிற்குள் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.