மூடப்பட்ட எல்லைகளை ஜனவரியில் திறக்கிறது நியூசிலாந்து!

banner

ந. பரமேஸ்வரன்





கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த நியூசிலாந்து எல்லைகளை , தற்போது கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்திருப்பதால், மீண்டும் திறப்பதற்கு நியூசிலாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.





இடம் பெயர்ந்தவர்களும் உல்லாசப்பயணிகளும் வருகிற மாதங்களில் நியூசிலாந்துக்குள் பிரவேசிக்கலாம். இவ்வாறு நியூசிலாந்தினுள் பிரவேசிப்பவர்கள் இரண்டு வாரங்கள் இராணுவத்தினரின் ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்படுவர்.





இடம்பெயர்ந்தவர்கள் ஜனவரி மாதம் முதலும் உல்லாசப்பயணிகள் ஏப்ரல் 30 முதலும் நியூசிலாந்தினுள் அனுமதிக்கப்படுவர்.





நியூசிலாந்தினுள் நுழையும் சகலரும் ஏழு நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர். முழுமையான தடுப்பூசி பெற்ற ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் நியூசிலாந்துபிரஜைகள் தனிமைப்படுத்தலுக்கு செ ல்லத்தேவையில்லை. நியூசிலாந்து பிரஜைகளி ல் 69% பேர் தற்போது முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளனர்.





கொவிட் அச்சுறுத்தல் கூடுதலாக காணப்பட்டதாக நியூசிலாந்து கருதிய இந்தியா, இந்தோனேசியா, பிரேசில் பிரஜைகளும் ஏப்ரல் 30 முதல் நியூசிலாந்தினுள் பிரவேசிக்க முடியும்.





நியூசிலாந்து தனது எல்லைகளை மூடியதையடுத்த பலரும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தனர் பலகுடும்ப உறவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.