ராஜபக்ச அரசில் ரணிலுக்கு உயர் பதவியா?

Politics 2 ஆண்டுகள் முன்

banner

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அரசுடன் இணையமாட்டார் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.





நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் இணையவுள்ளார் எனவும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.





சர்வதேசத்தின் ஆதரவை பெறுவதற்கும், அரச பங்காளிக்கட்சிகளின் அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கிலுமே அரசு இது பற்றி ஆராய்ந்து வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகின.





இந்நிலையிலேயே இத்தகவலை ஐக்கிய தேசியக்கட்சி நிராகரித்துள்ளது.





அதுதாபியில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கின்றார். அந்த மாநாட்டில் ஜனாதிபதியும் கலந்துகொள்கின்றார். இதனை அடிப்படையாக வைத்தே இவ்வாறு தகவல் பரப்பட்டுவருகின்றன எனவும் ஐ.தே.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.