சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடிப்பு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





சூடான் இராணுவ அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டக்காரர்கள் கார்களை வீதிகளின் குறுக்கே நிறுத்தி போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.





போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகையையும் சத்த வெடிகளை பிரயோகித்து வருகினறனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தினர் மீது கற்களை வீசுவதை முகநூல் காணொளிகள் ஊடக காணக்கூடியதாகவுள்ளது.





ஒக்டோபர் 25ம் திகதி சூடானில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியிருந்தது. ஜனநாயக செயற்பாட்டாளர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சூடான் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அர்ப்பட்டதிலீடுபட்டவர்களில் இதுவரை 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (செவ்வாய்க் கிழமை) ஆர்ப்பாட்டக்கார்கள் இராணுவத்தால் சூழப்பட்ட குடியரசு மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





இராணுவத்தினரால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் அப்தல்லா ஹம்டொக்கை மீண்டும் பதவியில் அமர்த்தி விட்டு ஆட்சி அதிகாரங்களை இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுப்பது தொடர்பான இராணுவத்தினரின் கோரிக்கைக்கு ஜனநாயக செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.





முன்னாள் பிரதமர் எங்களில் ஒருவர், நாங்கள் அவரை மதிக்கிறோம் முழுமையான் ஜனநாயகம் சூடானில் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.