அஸாத் சாலி விடுதலை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.





கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.





இனங்கள், மதங்களுக்கு இடையில் முரண்பாடை தோற்றுவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குழைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைதாகி, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.





2021 மார்ச் 9 ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அசாத் சாலிமீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து மார்ச் 16 ஆம் திகதி அஸாத் சாலி கைது செய்யப்பட்டார்.





பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்தார். சட்டமா அதிபரால் வழக்கும் தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையிலேயே குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுக்கப்பட்டுள்ளார்.