மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தியது சீனா!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்த சீனா தீர்மானித்துள்ளமை தொடர்பில் இராஜதந்திர வட்டாரங்களில் பல கோணங்களில் கதை அடிபடுகின்றது.





நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா சென்றுள்ள நிலையில் சீனா இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளமை குறித்தும் அதிருப்திகள் வெளியாகியுள்ளன.





மூன்றாவது தரப்பொன்று பாதுகாப்பு தொடர்பில் முன்வைத்த விடயங்கள் காரணமாக Sino Soar Hybrid Technology சீன நிறுவனம் இந்த செயற்றிட்டத்தை இடைநிறுத்தியதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





இலங்கையில் மூன்று செயற்றிட்டங்களையும் கைவிட்ட சீன நிறுவனம் மாலைத்தீவுகளிலுள்ள 12 தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசாங்கத்துடன் கடந்த 29 ஆம் திகதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்றிட்டத்தை ஆரம்பிக்க சீன நிறுவனம் தயாராகியிருந்தது.





இந்த திட்டத்திற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருந்ததுடன், சீன நிறுவனத்தின் இந்த செயற்றிட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருப்பதாக இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தது.