'கஜேந்திரகுமாருக்கு அருகதை இல்லை' - அமைச்சர் வீரசேகர சீற்றம்

banner

எந்த சர்வதேச நாடுகளும் செயற்படாத வகையில் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக வைத்திருந்த இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்களை அரசாங்கமே பாதுகாத்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.





தமிழ் மக்கள் கஷ்டப்படும்போது கொழும்பில் சொகுசாக வாழ்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.





தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கு அவசியமான வகையில் 2 இலட்சத்து 90 ஆயிரம் கண்ணிவெடிகளை அரசாங்கம் தமது சொந்த செலவில் அகற்றியுள்ளது. அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கு ஒரு யோகட்டை கூட வழங்குவதற்கு முன் வராத கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.





பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்





விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்.





தற்போது அகிம்சாவாதி போன்று சபையில் பேசும் அனுரகுமார திசாநாயக்க எம்.பி பிள்ளைகளை கொன்று பெற்றோர்களை அனாதையாக்கியதை மறந்து விட்டார். நாட்டில் குண்டு வெடிப்பு செய்தவர்களை தேசியப்பட்டியல் எம்.பியாக வருவதற்கு வாய்ப்பு வழங்கியவர்கள் இப்போது உயிர்த்த ஞாயிறு பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி பேசுகிறார்கள். அது தொடர்பில் பேசுவதற்கு அவர்கள் அருகதை இல்லாதவர்கள்.