'மறப்போம் - மன்னிப்போம்' - யாழில் வைத்து சம்பிக்க அறைகூவல்

banner

இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.





புலம்பெயர்ந்தவர்கள் தம்முடன் மீண்டும் இணைந்து கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.





யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.





" சிங்கள மக்கள் பெருவாரியான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கியிருந்த போதிலும் தற்போது அதே சிங்கள மக்கள் அவரை வெறுக்கின்றனர்.





ஜனாதிபதித் தேர்தல் 2023ஆம் ஆண்டு நடைபெறும். அந்த நேரத்தில் நேர்மையான துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுகின்ற ஒருவர் களமிறக்கப்படுவார்." -எனவும் சம்பிக்க குறிப்பிட்டார்.