ஆஸி. கல்வி அமைச்சர் இடைநிறுத்தம்
Politics 2 ஆண்டுகள் முன்
ந.பரமேஸ்வரன்
அவுஸ்திரேலிய கல்வியமைச்சர் அவரது பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.
கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அலன் துட்கே 2017ஆம் ஆண்டு அவரது ஊடக ஆலோசகராக இருந்த ரச்சேல் மில்லரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ரச்சேல் மில்லர் ஊடகவியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இதனை மறுத்த அமைச்சர் தான் சுயாதீன விசாரணைக்கு முகம் கொடுக்க தயார் என கூறியுள்ளார். பக்கச்சார்பற்ற விசாரணைக்கு மில்லரும் தயாராயிருப்பதாக மில்லரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
Related Posts