'பெண்களுக்கு சம உரிமை' - ஜோர்தான் நாடாளுமன்றில் அடிதடி (காணொலி)

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





ஜோர்டான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது தொடர்பாக இடம் பெற்ற விவாதத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.





செவாய்க்கிழமையன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஜோர்டானில் தற்போது பெண்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு,மற்றும் பொது இடங்களில் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது ஆனால் பிரஜாவுரிமை விடயத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படவில்லை.





குறிப்பாக ஜோர்தானிய பெண்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு ஜோர்தான் பிரஜாவுரிமை இல்லை அனால் ஜோர்தான் ஆண்கள் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்யும் பட்சத்தில் அவர்களது பிள்ளைகளுக்கு ஜோர்தான் பிரஜாவுரிமை வழங்கப்படும். இந்த சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக இடம் பெற்ற விவாதத்தின் போதே களேபரம் ஏற்பட்டுள்ளது.





இந்த விவாதத்தின் போது பஞ்சர்கள் வீசப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.






https://youtu.be/CHszmEJhvQA