'எரிவாயு வரிசையின் எதிரொலி' - பறிபோகிறது பதவி!

banner

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைமைப்பதவியில் இருந்து தெஷார ஜயசிங்கவை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.





புதிய தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளரான ரேணுக பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.





நாட்டில் எரிவாயு வெடிப்புகள் மற்றும் தட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் லிட்ரோ எரிவாயு நிறுவனம்மீது மக்கள் கடும் சீற்றத்தில் உள்ளனர். அதன் தலைவரை விரட்ட வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள்கூட வலியுறுத்திவந்தனர்.





இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.





புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளவர் பஸிலின் சகா என்பது குறிப்பிடத்தக்கது.