மைத்திரியை கைது செய்ய பொறி வைப்பு!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்ட அடிப்படையில் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதும் எமக்கு தெரியும். நேரம்வரும்போது விவரம் வெளியிடப்படும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" எமது தலைவர் அரசை விமர்சித்துவருவதால், எதாவது செய்து அவரை சிறையில் அடைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்த சவாலை அவர் எதிர்கொள்வார். எமது கட்சியும் தயார்நிலையில்தான் உள்ளது. மைத்திரிபால சிறிசேனவை பலவந்தமாக சிறையில் அடைக்க முற்படுவது யார் என்பதும் எமக்கு தெரியும். அரச பிரதானிகளா அல்லது வெளியில் உள்ளவர்களா என தற்போதே குறிப்பிடமுடியாது. நேரம்வரும்போது எல்லாவற்றையும் வெளிப்படுத்துவோம்.





நாட்டில் சட்டமென ஒன்று இருக்கின்றது. ஆனால் அதற்கு அப்பால் சென்று, மைத்திரியை சிறையில் அடைக்க வேண்டும் என சில அமைச்சர்கள் வலியுறுத்திவருகின்றனர். எனவே , இதன் பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரலொன்று இருக்கக்கூடும்.





அதேவேளை, அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும், அரசின் பயணம் தவறெனில் அதனை தைரியமாக சுட்டிக்காட்ட மத்திய குழு அனுமதித்துள்ளது. அரசின் பதவிகாலம் முடியும்வரை நாம் அரசில் அங்கம் வகிப்பாமோ என்பதை இப்போது கூறமுடியாது. சிலவேளை, எமது கட்சி நீக்கப்படக்கூடும்."
" - என்றார்.