'போர்கால இரகசியத்தை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்'

banner

" விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சில தினங்கள் ஆயுதங்கள் இல்லாத நிலையும் காணப்பட்டிருந்தது. அவற்றை ஊடகங்களுக்கு அன்று சொல்லியிருந்தால், என்ன நடந்திருக்கும்?





எனவே, எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது ." என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.





மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,





" 5 நாட்கள் மற்றும் 6 நாட்களுக்குதான் எரிபொருள் இருக்கின்றன என கூறுகின்றனர். ஆனால் கப்பலொன்று வந்தால் நிலைமை மாறும். இது நாளாந்த நடவடிக்கை. நாட்கள் பற்றி அறிவிப்பதால்தான் மக்கள் மத்தியில் பதற்றம் உண்டாகின்றது. போர் காலத்தில் சிலநேரம் தோட்டாக்கள்கூட இல்லாமல் இருந்துள்ளது. இதனை வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு வெளிப்படுத்தியிருந்தால் எதிரிகள் உஷாரடைந்திருப்பார்கள்." - என்றார்.