இலங்கையை ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘டெல்டா’ பிறழ்வானது உலகில் ஏனைய நாடுகளை தாக்கிய பின்னரே, இலங்கையில் வேகமாக பரவியது. அந்தவகையில் ஒமிக்ரோன் பிறழ்வானது தற்போதுதான் உலக நாடுகளில் பரவிவருகின்றது. எனவே, அந்த பிறழ்வு இலங்கையை தாக்காது என கூறமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒமிக்ரோன் வேகமாக பரவிவரும் நிலையில், பொது மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்தால் அது முதன்மை வைரஸாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்துக்கு பின்னர் இலங்கையில் வைரஸ் பரவல் வேகம் சடுதியாக அதிகரித்துவருகின்றது. நாளொன்றுக்கு 800 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் பாடசாலை மாணவர்களும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேவேளை, மூன்றாவது தடுப்பூசியை மக்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீண்டுமொரு பொது முடக்கத்தை சந்திக்க நேரிடக்கூடிய அபாயம் உள்ளது.