'சீனா விளக்கமளிக்க வேண்டும்' - ஆஸி. பிரதமர் வலியுறுத்து

Politics 2 ஆண்டுகள் முன்

banner

“ அவுஸ்திரேலிய யுத்தகப்பல்மீது ‘லேசர்’ பாய்ச்சியமை தொடர்பில் சீனா விளக்கமளிக்க வேண்டும்.” என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.





“ இது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என்பதுடன் ஆபத்தான விடயமும்கூட. எனவே, எதற்காக சீனா இவ்வாறு செய்தது என விளக்கமளிக்கப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.





“ இப்போது அவுஸ்திரேலிய விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தது யார்? அவுஸ்திரேலிய கடற்படை மட்டுமா சீனக்கடலில் பயணிக்கிறது, பிரிட்டிஷ் யுத்த கப்பல்கள், அமெரிக்க யுத்தகப்பல்கள், கனேடிய யுத்தகப்பல்கள், ஜப்பானிய யுத்தகப்பல்கள், பிரெஞ்சு யுத்தகப்பல்கள், ஜேர்மன் யுத்தகப்பல்கள் எல்லாம் பயணிக்கின்றன.





எனவே, ஆஸ்திரேலிய கப்பல் மட்டும் ஏன் இலக்கு வைக்கப்பட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும்.” – என்றார்.