ரஷ்யாமீது ஆஸ்திரேலியாவும் பொருளாதாரத்தடை!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ரஷ்யாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா விதித்துள்ள முதற்கட்ட தடைகள் எதிர்வரும் மார்ச் இறுதியில் அமுலுக்கு வரும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.





“ இந்த தடைகளானவை, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் இதயம் என்று கருதப்படும் ரஷ்ய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகவே கொண்டு வரப்படுகிறன.” எனவும் பிரதமர் மொறிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.





“நாங்கள் இதைச் செய்வதற்குக் காரணம், உக்ரைன் மீது ரஷ்யாவால் சுமத்தப்பட்ட சட்டவிரோத, தேவையற்ற, நியாயமற்ற தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மிரட்டல்களுக்கு ஒரு விலை இருக்க வேண்டும்.” எனவும் அவர் விவரித்துள்ளார்.





அதேவேளை, தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள உக்ரைன் பிரஜைகளின் விசா காலம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் எனவும் பிரதமர் மொறிசன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நேசநாடுகளுடன் இணைந்தே அவுஸ்திரேலியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.