உக்ரைனில் இருந்து 20 லட்சம் பேர் இடம்பெயர்வு!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

உக்ரைன் போர் காரணமாக இதுவரை சுமார் இருபது லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா.மதிப்
பிட்டுள்ளது. அவர்களில் பலர் மேற்கு ஐரோப்பியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து செல்வதற்காக கலே பகுதியில் காத்தி ருந்த நூற்றுக்கணக்கான உக்ரைனியர் களை உள்ளே எடுக்க லண்டன் மறுத்துவிட்டது.





வீஸாவுக்கான முறைப்படியான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு வருமாறு பிரிட்டிஷ் எல்லைக்காவல் பொலீஸார் அவர்களுக்கு அறிவித்துள்ளனர். உக்ரைனியர்கள் தங்கள் விண்ணப் பங்களைச் சமர்ப்பிப்பதற்காக பாரிஸில்
உள்ள இங்கிலாந்து தூதரகம் இரண்டு விசேட வீஸா அலுவலகங்களைத் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.





எல்லையில்-பிரான்ஸின் கலே பகுதியில் வைத்து வீஸா விண்ணப்பங்களை ஏற்பது அங்கு பெரும் குழப்பங்களை ஏற்
படுத்தும் என்பதால் நிலையங்கள் வேறு இரு இடங்களில் திறக்கப்படுகின்றன என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்
துள்ளனர்.





அதேசமயம், இங்கிலாந்து அகதிகள் மீது இரக்கம்கொண்டிருந்தாலும் அவர்களை யார் எவர் என்று பார்க்காமல் கண்டபடி உள்ளெடுக்காது என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.கடவுச்சீட்டு மற்றும் வழமையான பரிசோதனை களின் பிறகே முறைப்படி அகதிகள் உள்வாங்கப்படுவர் என்பதே அவரதுநிலைப்பாடு.





பெரும் அவலங்களுடன் வருவோரை வீஸா விண்ணப்பிக்குமாறு கேட்பது மனிதாபிமானத்துக்குப் புறம்பானது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.





பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அரசின் உக்ரைன் அகதிகள் தொடர்பான கொள்கைகள் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளன.





இதேவேளை, ஜேர்மனி உக்ரைனில் இருந்து வெளியேறி வருபவர்களை அவர்கள் எந்த நாட்டுக் குடிமக்கள் என்று
பார்க்காமல் உள்ளே அனுமதிக்கும், பாஸ் போர்ட் பரிசோதனைகளில் பாகுபாடு இருக்காது என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் (Nancy Faeser) தெரிவித்திருக்கிறார்.





"நாங்கள் உயிர்களைப் பாதுகாக்க விரும் புகின்றோம். அதற்குக் கடவுச்சீட்டு அவசி யமல்ல" - என்று அவர் ஊடகங்களுக்குத்
தெரிவித்திருக்கிறார். இதுவரை முப்பதா யிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் ஜேர்மனி வந்தடைந்துள்ளனர்.





குமாரதாஸன். பாரிஸ்.