தாய்வழி உறவை அரவணைப்பதில் தமிழ்நாடு சிறந்த முன்னுதாரணம்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

உயிர்காக்கும் நோக்கில் கடல்கடந்து வரும் இலங்கை தமிழர்களை,தாயுள்ளத்துடன் அரவணைக்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.





தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் அனுப்பியுள்ள அந்தகக் கடடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,





தமிழக முதலமைச்சருக்கு தமிழகத்தில் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் சார்பாக வணக்கங்களை தெரிவிக்கிறோம். 'கடல் நீர் உப்பாக இருப்பதற்கு கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீர்தான்' காரணமென அறிஞர் அண்ணா எழுதிய வரிகளை நினைவூட்டுகிறோம்.





இலங்கை தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில், சட்டப்பேரவை விதி இலக்கம் 110-இன்கீழ் 27.8.2021 இல், ரூ.317.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதலவர்வராகிய நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள்.





தமிழக மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை, இத்திட்டங்கள் மேம்படுத்திவருகின்றன. அவதிக்குள்ளாகும் தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.இவ்வாறு வருவோரை வரவேற்று, அவர்களுக்கு உதவிகள் செய்வது எம்மை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.





இலங்கை தமிழர்களுக்கு விடிவுகாலம் ஏற்படுத்தி தரப்படும் என்றும் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேசி வருவதாகவும் சட்டப்பேரவையில் நீங்கள் தெரிவித்துள்ளீர்கள்.இது அனைவருக்கும் மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.