DIG தேஷபந்து தென்னகோனுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

Politics 1 வருடம் முன்

banner

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நாளை(13) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.





மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று ஆஜரான பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் முன்வைத்த விடயங்களின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது .





மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.





போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம், அவ்வேளையில் அரசியல் வாதிகளுடன் இருந்த தொடர்பு உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது விசாரணை நடத்தப்படவுள்ளன.





தாக்குதலுக்கு இலக்கான தேசபந்து தென்னகோன், பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார். எனவே, அவர் நாளை முன்னிலையாவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.





அதேவேளை, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், இன்று மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.





வட்டரெக்க சிறைச்சாலை கைதிகள் சிலர், கடந்த 9 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கே அழைக்கப்பட்டுள்ளார்.