ரணிலுக்கு அடித்த அதிஷ்டம் - ஆதங்கப்படும் விமல்

banner

" தேர்தலில் தோற்றவர்தான் ரணில். தேசியப்பட்டியல் ஊடாக சபைக்கு வந்த அவருக்கு, அதிஷ்ட லாப சீட்டு விழுந்ததுபோல, பிரதமர் பதவியும் கிடைத்துள்ளது. நெருக்கடிநிலைகூட ரணிலுக்கு ஆசிர்வாதமாக அமைந்துவிட்டது."





இவ்வாறு விமல் வீரவன்ச தெரிவித்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" எமது வீடுகளை தீவைப்பதால் பிரச்சினை தீருமா? எமது வீடுகளை தாக்க வந்த போது பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் கொள்ளையடித்தார்கள். சகல பொலிஸ் நிலையங்களுக்கும் நடவடிக்கை எடுக்காதிருக்க அறிவிக்கப்பட்டிருந்தது.





இராணுவமும் அனுப்பப்படவில்லை. சட்டம் ஒழுங்கு நிறைவேற்றப்படவில்லை.வீடுகளை தீவைத்து பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியும் என்பது வெறும் கனவு. அலரி மாளிகைக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்து ஊக்கம் அளித்ததை கண்டிக்கிறோம்.





தேர்தலில் தோற்றவர், ஒன்றரை வருடமாக தேசியப் பட்டியலின்ஊடாக வரமுடியாத வருக்கு அதிஷ்ட லாப சீட்டு கிடைத்து பிரதமராகி உள்ளார். 9 ஆம் திகதி சட்டம் ஒழுங்கை குலைத்தவர்களை கைது செய்ய வேண்டும். தங்களை கைது செய்யலாம் என்பதால் வன்முறையுடன் தொடர்புள்ளவர்களை கைது செய்வதை சிவப்பு ஆடைக்காரர்கள் எதிர்க்கிறார்கள்.





சட்டம் ஒழுங்கை முன்னெடுக்காத சகல பிரதானிகளையும் நீக்க வேண்டும். எமது பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களை தீவைத்துள்ளனர். பல்கலைக்கழக கல்வி பெறுகின்றனர். அதனை மீள வழங்க முடியுமா? மண்ணெண்ணைய் பீப்பாய்கள் முன்கூட்டி தயார் செய்தது யார்? எமக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதனை ஒதுக்கி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் செயற்பட வேண்டும்." - என்றார்.