நாட்டில் தற்போது நிலவும் எரிவாயுப் பிரச்சினை மற்றும் தட்டுப்பாடு தொடர்பில் ஆராயும் நோக்கில் லிட்ரோ நிறுவன பிரதிநிதிகளை, நாளை (20) மு.ப 11 மணிக்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அழைத்துள்ளது.
எரிவாயு விநியோக செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது விடயம் தொடர்பில் ஆராய லிட்ரோ நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமையவே விசாரணை இடம்பெறவுள்ளது.