பண வீக்கம் - அபாய கட்டத்தில் இலங்கை

Politics 1 வருடம் முன்

banner

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையின் உண்மையான பணவீக்கம் 132% ஆக உயர்ந்துள்ளதென அமெரிக்காவின் ஜோன் ஹோகின்ஸ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.





கடந்த மாதம் இந்த பல்கலைக்கழகத்தால் முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி இலங்கையின் பணவீக்க வீதத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது.





இருந்தும் மார்ச் மாதத்தின் பணவீக்க வீதத்தை கணக்கிடும்போது இரண்டாவது இடத்தில் இருந்த லெபனானை விட பணவீக்கம் 2 வீதத்தால் அதிகரித்து இலங்கை இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.





இறுதியாக இலங்கையின் உத்தியோகபூர்வ பணவீக்கம் மார்ச் மாதத்தில் 21.5 விதமாக உள்ளதென புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்திருந்த போதும் உண்மையான பணவீக்கம் இன்றளவில் மூன்று இலக்கத்தை கொண்டதாக அதிகரித்துள்ளது.