10 கட்சி கூட்டணியையும் உடைத்தார் ரணில்! டிரானுக்கு அமைச்சு பதவி

Politics 1 வருடம் முன்

banner

விமல் வீரவன்ச உள்ளிட்ட 10 கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலவுக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.





பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் நேற்று பதவியேற்றார்.





எதிரணியில் இருந்துகொண்டு அரசின், மக்கள் நலத் திட்டங்களை ஆதரிப்பதெனவும், அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை எனவும் 10 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்திருந்தது.





இந்நிலையிலேயே 10 கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த டிரான் அலஸ், அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார்.





அத்துடன், அநுரபிரியதர்சன யாப்பா தலைமையிலான சுயாதீன அணியில் இடம்பெற்றிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பெர்ணான்டோ, வர்த்தகம், கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அநுர அணியில் இருந்த சுசிலுக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.





தினேஷ் குணவர்தன, ஜீ.எல். பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர ஆகிய மொட்டு கட்சி உறுப்பினர்கள் நால்வர் ஏற்கனவே, அமைச்சு பதவிகளை ஏற்றுள்ள நிலையில், கெஹலிய, ரமேஷ் பத்திரண ஆகிய மொட்டு கட்சி உறுப்பினர்களும் நேற்று அமைச்சர்களாகினர்.