சம்பிக்கவுக்கு அமைச்சு பதவி?
Politics 1 வருடம் முன்
" நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க விரும்பினால், மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சு பதவியை அவரிடம் ஒப்படைக்க நான் தயார்."
இவ்வாறு மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார் .
வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
" ஏற்கனவே இவ்வமைச்சு பதவியை சம்பிக்க ரணவக்க வகித்துள்ளார். அவருக்கு அனுபவம் உள்ளது. எனவே, அவர் முன்வந்தால் அமைச்சு பதவியை கையளிக்க நான் தயார். எமக்கு பதவி முக்கியம் அல்ல. நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதே முக்கியம்.
இதற்காக அரசியல் பேதங்களை மறந்து இணைந்த ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரை வரவேற்கின்றோம்." - என்றார்.
Related Posts