ஆஸி. நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதலாவது இலங்கை பெண்

banner

இலங்கையைச் சேர்ந்த கெசென்ட்ரா பெர்ணான்டோ, (Cassandra Fernando) அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.





தொழிற்கட்சியை சேர்ந்த இவர், அவுஸ்திரேலியாவின் ஹோல்ட் தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.





Cassandra Fernando, 1999 ஆம் ஆண்டு தனது 11 ஆவது வயதில் குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.





அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதலாவது இலங்கை பெண்ணாகவும் அவர் பதிவாகியுள்ளார்.





மற்றுமொரு இலங்கையரான ரஞ்ச் பெரேரா, ஹோல்ட் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் Cassandra Fernando-ஐ எதிர்த்து போட்டியிட்டார்.





Cassandra Fernando, 57.5 வீத வாக்குகளைப் பெற்ற அதேவேளை ரஞ்ச் பெரேரா 42.5 வீத வாக்குகளையே பெற்றுக் கொண்டார்.