ஜுன் நடுப்பகுதியில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி - சம்பிக்க எச்சரிக்கை

Politics 1 வருடம் முன்

banner

ஜூன் மாத நடுப்பகுதியில் நிச்சய மாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ளமுடியாத பொருளாதார நெருக்கடிநிலைமை உருவாகும். அது நிச்சயமாக பாரியளவில் ஒரு கலவரமாக தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.





நாட்டின் நெருக்கிடி நிலை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் -





" ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாத மக்களால் கலவரங்கள் உருவாகலாம். எரிபொருள், எரிவாயு, மருந்துப்பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள்நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிவரும். 





இறுதியில் பொருள்களைப் பெற்றுக்கொள்வது மக்கள் மத்தியில் கலவரமாக தோற்றம் பெறும் வாய்ப்புள்ளது. இது கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள்சொத்துக்கள் மட்டும் அன்றி நாட்டில்உள்ள அனைவரினதும் சொத்துகளும் கொள்ளையிடப்படும். அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் இன்மையால் நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது.





நேச நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடம் பெற்றுக்கொள்ளப்பட்டகடன்கள் மீள் செலுத்தப்படாது என்று ஏப்ரல் மாதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டகடன்களை மீளச் செலுத்தாமல் புதியகடன்களை பெற்றுக் கொள்வது பொருத்தமற்றது.  தற்போது இது தொடர்பாகதனது அதிருப்திகளை சீனா வெளியிட்டு இருக்கிறது.





சீனாவிற்கு இவ்வருட இறுதிக் காலப்பகுதிக்குள் மொத்தமாக சுமார் 920 மில்லியன் டொலர்கள் செலுத்தவேண்டியிருக்கிறது.
இலங்கைக்கு உலக வங்கி தற்போது400 மில்லியன் டொலர்களை வழங்குவதாக தெரிவித்த நிலையில், அதில் ஒருபகுதியைக் கொண்டு எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யலாம். இதன் மூலம் தற்காலிகமாக இப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலும், மீண்டும் பொருள்களுக்கு தட்டுப்பாடு மற்றும்வரிசையில் நிற்கும் யுகம் தோன்றும்.





உலக சந்தையில் எரிவாயு உட்பட பலபொருள்களுக்கான விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், இலங்கையில் மாத்திரம் அதிக விலைக்கு கொடுத்து பொருள்களைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலைமையில் நாட்டு மக்கள் உள்ளனர். 





இந்த நிலையில் ஜூன் மாத நடுப்பகுதி யளவில் மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடிநிலைமை உருவாகும் - என்றார்