சமஷ்டி தீர்வை பெற்று தாருங்கள் - ஜப்பானிடம் யாழ். முதல்வர் கோரிக்கை

Politics 1 வருடம் முன்

banner

" இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் சமாதானப் பேச்சுகளுக்காக விசேட தூதுவர் யசுசி அகாஷியை ஜப்பான் அன்று நியமித்திருந்தது. அதேபோல இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பான் அரசு பங்களிப்பு செய்ய வேண்டும்."





இவ்வாறு ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். முதல்வர் மணிவண்ணன்.





யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஜப்பானிய தூதுவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று யாழ் மாநகரசபையில் இன்று நடைபெற்றது.





இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.





குறிப்பாக ஜப்பான் கடந்த காலங்களில், யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.





அத்துடன், இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது , குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார்.





தற்போதும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும்,





தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஜப்பான் உதவி வருகின்ற நிலையில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி - முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜப்பான் முன்வைக்க வேண்டும் என்றும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார்.