பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி - வெளியான அதிர்ச்சி தகவல்!

banner

2021 ஆம் ஆண்டு காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி1.6 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2022 முதலாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீட்டை வெளியிடுவது தொடர்பான அறிக்கையை விடுத்து புள்ளிவிபரத் திணைக்களம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.





பணவீக்கம், ரூபாவின் பெறுமதி குறைந்தது, டொலர் பற்றாக்குறை, வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் உல்லாசப் பயணத்துறை வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக இவ்வருடம் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.





அதேபோல் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பல்வேறு தடைகள் காரணமாகளவும் உற்பத்தி, கட்டிட நிர்மாணம், தொழிற்சாலைகளில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியனவும் பொருளாதார அபிவிருத்தியை பாதித்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது