லிபியாவின் நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு!

banner

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தைப் போராட்டக்காரர்கள் தாக்கி அதன் சில பகுதிகளுக்குத் தீ மூட்டியுள்ளனர்.





தொடர் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது.





லிபிய மக்கள் டோப்ரூக் நகரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.





பின்னர் அவர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு அதன் ஒரு பகுதிக்குத் தீ மூட்டியுள்ளனர்.





தற்போது லிபியா தலைநகர் திரிப்போலியிலும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.





உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





இந்தப் போராட்டங்களுக்கு லிபிய இடைக்கால அரசின் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.