சர்வதேச ஆதரவை திரட்டுவதில் ரணில் தீவிரம்!

banner

நாடு முகம் கொடுத்து வரும் பொருளாதார சவாலை வெற்றி கொள்வதற்கு, அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்வது ஒரே வழி என ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.





இதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள விரிவான வேலை திட்டம் ஒன்றை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்தி வருகின்றார் எனவும் அவர் கூறினார்.





தற்போது கேஸ், எரிபொருள், மின்சாரம், உணவு தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு அப்பால் பாரதூரமான நிலைக்கு நாடு முகங்கொடுத்து வருவதாகவும் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டி எழுப்புவதே பிரதான சவால் எனவும் தெரிவித்தார்.





பொருளாதாரம் முற்றாக வீழ்ந்த அந்நிய செலாவணி கையிருப்பே இல்லாத நாட்டை மீள கட்டியிருப்பது இலகுவான காரியம் அல்ல. பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தபோது அதனை தடுப்பதற்குரிய வேலை திட்டங்களை முன்னெடுத்து
இருந்தால் நாடு நிலைமைக்கு முகம் கொடுத்திருக்காது எனவும் தெரிவித்தார்.