பிரபாகரனின் படத்துடன் பேரறிவாளன்

banner

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படத்தை கோவையில் பேரறிவாளன் திறந்து வைத்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது.





ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் அண்மையில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் எஞ்சிய 6 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.





இதனிடையே சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன், தமிழகம் முழுவதும் தமது ஆதரவாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் ஒரு சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபாகரன் படத்தையும் பேரறிவாளன் திறந்து வைத்தார்.





இதுதான் இப்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் எதிர்ப்பாக, ஆதரவாக கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.