கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?
Politics 11 மாதங்கள் முன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே அரசால் கரும்புலி தாக்குதல் கதை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது - என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தொடர்வதற்கான ஒரு நகர்வாகவும் இது இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டார்.
அதேவேளை, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Related Posts